உலகம்

சோனாமார்க் சுரங்கப்பாதையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

14/01/2025 05:26 PM

சோனாமார்க், 14 ஜனவரி (பெர்னாமா) -- குளிர்காலத்தில் கடுமையான பனிப் பொழிவால் பாதிக்கப்படும் காஷ்மீரின் வடகிழக்கு பகுதிக்கு ஆண்டு முழுவதும் போக்குவரத்து சேவை வழங்கும் சுரங்கப் பாதையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

தொடர் பாலங்கள் மற்றும் உயரமான மலைப்பகுதி சாலைகளுக்கு இடையே கட்டப்பட்டிருக்கும் இந்த சுரங்கப்பாதை 93 கோடியே 20 லட்சம் டாலர் செலவில் கட்டப்பட்டதுள்ளது.

சோனாமார்க் நகரத்திற்குப் பலத்த பாதுகாப்புடன் சென்றிருந்த நரேந்திர மோடி 6.5 கிலோ மீட்டர் சுரங்கப்பாதையைத் திறந்து வைத்தார்.

ஜம்மு - காஷ்மீரின் கந்தேர்பால் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள காகங்கீர் ககாங்கிர் மற்றும் சோனாமார்க் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

Z-MORH என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தச் சுரங்கப்பாதை அனைவரும் ரசிக்கக்கூடிய சுற்றுலா தளமாகவும் விளங்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த சுரங்கப்பாதையின் பணிகள் 2015ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது.

இருப்பினும், பொருளாதார சவால்கள் காரணமாக 2018ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டதால் இந்தத் திட்டம் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)