பொது

சரவாக்கில் ஐந்து வாகனங்களை உட்படுத்திய விபத்தில் நால்வர் பலி

14/01/2025 06:23 PM

கூச்சிங் , 14 ஜனவரி (பெர்னாமா) -- சரவாக்கில், ஜாலான் ஸ்துதோங்கில் இருந்து கூச்சிங் விமான நிலையம் நோக்கிச் செல்லும் சாலையில் இன்று நண்பகல் சுமார் 12.40 மணிக்கு நிகழ்ந்த மூன்று இரண்டு மோட்டார்சைக்கிள் உட்பட ஐந்து வாகனங்களை உட்படுத்திய விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் மூவர் ஆண்கள்.

மேலும் ஒருவர் பெண் என்று சரவாக் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மூட்புத்துறை நடவடிக்கை மையம் குறிப்பிட்டுள்ளது.

இவ்விபத்தில் ஒரு ஆணும் பெண்ணும் படுகாயங்களுக்கு ஆளான வேளையில் மேலும் மூன்று ஆண்களுக்குச் சொற்ப காயங்கள் ஏற்பட்டது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

காயத்திற்கு ஆளானவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)