தென் கொரியா, 16 ஜனவரி (பெர்னாமா) -- நேற்று கைதான தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோல், இராணுவச் சட்டம் அறிவிப்பு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணக்காக சியோல் தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தென் கொரிய வரலாற்றில் அதிபர் பதவி வகித்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
சியோலில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உய்வாங் தடுப்பு மையத்தில் யூன் சுக் யோல் தடுத்து வைக்கப்பட்டார்.
சிஐஒ எனும் உயர் அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலத்தில், அவரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி இராணுவச் சட்டத்தின் அறிவிப்பு சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்க யூன் மறுத்துவிட்டதாக சிஐஒ தெரிவித்தது.
புதன்கிழமை கைது செய்யப்பட்ட அவர், 48 மணி நேரத்திற்குள் இன்னும் சில விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, தம்மை கைது செய்யும் நடவடிக்கை சட்டபூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை என்று யூன் முன்னதாக குற்றம் சாட்டியிருந்தார்.
சிஐஒ தலைமையகத்தின் ஓர் அறையில் நடைபெற்ற இந்த விசாரணையில் யூனின் வழக்கறிஞர் ஒருவர் கலந்து கொண்டிருக்கின்றார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)