லண்டன், 17 ஜனவரி (பெர்னாமா) -- பிரிட்டனுக்கு ஐந்து நாள்கள் அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்நாட்டில் உள்ள பல முன்னணி நிறுவனங்களுடன் வர்த்தக ரீதியிலான நேரடி சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார்.
அதில் எஸ்சிபி எனப்படும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின் தலைமை செயல்முறை அதிகாரியின் தலைமையில் நடைபெற்ற சந்திப்பிலும் அன்வார் கலந்து கொண்டார்.
JS-SEZ எனப்படும் ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உலகளாவிய வர்த்தகங்கள் ஈடுபடுவதை எளிதாக்க, மலேசியா மற்றும் சிங்கப்பூர் அரசாங்கங்களின் ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகளை எஸ்சிபி ஆராய்ந்து வருவதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதோடு, ஜோகூரில் உள்ள செடெனாக் தொழில்நுட்ப பூங்காவில் சில திட்டங்களை மேற்கொண்டு வரும் ஜேஎல்ஆர் எனப்படும் ஜாகுவான் லேன்ட் ரோவர் மற்றும் ரோவ் எனர்ஜி என்ட் யோண்டர் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளையும் பிரதமர் சந்தித்தார்.
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ ஜாப்ருல் துங்கு அப்துல் அசிஸ், உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்பாய் அப்துல் கதிர் மற்றும் தோட்டம் மற்றும் மூலப்பொருள் அமைச்சர் டத்தோ செரி ஜொஹாரி அப்துல் கனி ஆகியோரும் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
முன்னதாக இங்கிலாந்தின் தொழில்துறை தலைவர்களுடனான சந்திப்பிலும் அன்வார் கலந்து கொண்டார்.
இதில் 30 நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த முன்னணி தொழில்துறையினர் 53 பேர் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)