புது டெல்லி, 17 ஜனவரி (பெர்னாமா) -- இந்திய பொதுப் பூப்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு நாட்டின் தேசிய கலப்பு இரட்டையர்கள் செங் தாங் ஜி - தோ ஈ வெய் ஜோடி முன்னேறியது.
இன்று பிற்பகல் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மலேசிய இணை, கணித்தது போலவே, நேரடி செட்களில் தாய்லாந்து ஆட்டக்கார்களைத் தோற்கடித்துள்ளது.
புது டெல்லியின் இந்திரா காந்தி அரங்கில் நடைபெற்று வரும் இந்தப் பொதுப் பூப்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் செங் தாங் ஜி - தோ ஈ வெய் ஜோடி, தாய்லாந்தின் ரூட்டனபாக் ஒப்தோங் - ஹெனிக்கா இணையரைச் சந்தித்தது.
அதில், முதல் செட்டில் 21-16 என்று மலேசிய இணை வென்றது.
அதே உத்வேகத்துடன் இரண்டாம் செட்டில் களமிறங்கிய தாங் ஜி - தோ ஈ வெய் ஜோடி 21-17 என்று 43 நிமிடங்களில் தங்களின் வெற்றியை உறுதி செய்தனர்.
இதனிடையே, மற்றொரு கலப்பு இரட்டையர் பிரிவில் போட்டியிட்ட கோ சூன் ஹுவாட் - ஷெவோன் லாய் ஜெமி ஜோடியும் நேரடி செட்களில் வெற்றிப் பெற்றனர்.
கணவன் மனைவி ஜோடியான அந்த இணை, தைவானின் யாங் போ சுவான் - ஹு லிங் ஃபாங் ஜோடியை, 29 நிமிடங்களில் 21-11, 21-15 என்ற நிலையில் தோற்கடித்து அரையிறுதிகு தகுதி பெற்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)