விளையாட்டு

டெனில் மெட்வடேவ் அதிர்ச்சி தோல்வி

17/01/2025 07:16 PM

சிட்னி, 17 ஜனவரி (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி.

இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில், ரஷ்யாவின் டெனில் மெட்வடெவை அதிர்ச்சி தோல்வியடைச் செய்துள்ளார் அமெரிக்காவின் இளம் ஆட்டக்காரர் லினெர் தீன் 

கடந்த ஆண்டின் ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் இரண்டாம் நிலை வெற்றியாளரான மெட்வடெவ் இம்முறை இரண்டாம் சுற்றிலியே அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

19 வயதான தீன் கடும் போராட்டத்திற்கு பின்னர் தமது வெற்றியை உறுதி செய்தார்.

சுமார் 4 மணி நேரங்கள் 48 நிமிடங்கள் வரை நீடித்த இவ்வாட்டத்தில் அவஎ 6-3, 7-6 என்று முதல் இரு செட்களைப் கைப்பற்றினார்.

அடுத்த இரு செட்களில், 6-7,1-6 என்ற புள்ளிகளுடன் மெட்வடெவின் கைகள் ஓங்கியது.

ஆயினும் 7-6 என்று இறுதி செட்டை தீன் தனக்கு சாதகமாக முடித்ததில், அவர் வெற்றிகரமாக மூன்றாவது சுற்றில் கால் வைத்துள்ளார்.

உலகத் தரவரிசையில் 121-வது இடத்தில் இருக்கும் அவர் அடுத்த சுற்றில், தரவரிசையில் 69-வது இடத்தில் உள்ள பிரான்சின் கொரிண்டெட் மெளடட்டை நாளைச் சந்திக்கவுள்ளார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)