முனிக், 19 ஜனவரி (பெர்னாமா) -- ஜெர்மனி பண்டேஸ்லீகா கிண்ணம்.
நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பாயேன் முனிக் 3-2 என்ற கோல்களில் வொல்ஃப்ஸ்பர்க் அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் வழி, அது 45 புள்ளிகளோடு பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
நேற்றிரவு தனது சொந்த அரங்கில் விளையாடிய பாயேன் முனிக், எதிரணியான வொல்ஃப்ஸ்பர்குடன் கடும் சவாலை எதிர்கொண்டது.
முதல் பாதி ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பாயேன் முனிக் அதற்கான முதல் கோலைப் போட்ட வேளையில் அதனை விரட்டிப் பிடிக்க வொல்ஃப்ஸ்பர்க் போராடியது.
அதன் பலனாக 24வது நிமிடத்தில் அது ஒரு கோலைப் போட்டு ஆட்டத்தை 1-1 என்று சமன் செய்தது.
பின்னர் 39-வது நிமிடத்தில் பாயேன் அதற்கான கோலைப் அடித்து 2-1 என்று முதல் பாதியை முடித்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோலைப் போட்ட வேளையில் முடிவு 3-1 என்று பாயனுக்குச் சாதகமானது.
இதனிடையே, புள்ளிப்பட்டியலில் பாயேன் முனிக்கை விரட்டிப் பிடித்து பின்னுக்குத் தள்ள காத்துகொண்டிருக்கும் பயர் லெவர்குசென் நேற்றிரவு பொருசியா மொன்சென்கிளாட்பாகுடன் களம் கண்டது.
அதில், 3-1 என்ற நிலையில் அது வெற்றிப் பெற்று நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் பட்டியலில் 41 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
பயர் லெவர்குசெனின் முதல் கோல் முதல் பாதியிலும் எஞ்சிய இரு கோல்கள் இரண்டாம் பாதியிலும் அடிக்கப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)