உலகம்

பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பைக் கொண்டாட ஒன்று திரண்ட பாலஸ்தீனர்கள்

20/01/2025 06:33 PM

காசா, 20 ஜனவரி (பெர்னாமா) -- இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேல் சிறைகளில் இருந்து பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டதைத் கொண்டாடுவதற்கு திங்கட்கிழமை ரமல்லா அருகே பாலஸ்தீனர்கள் கூடினர்.

ரமல்லாவிற்கு அருகே அமைந்துள்ள இஸ்ரேலிய இராணுவ ஒஃப்இஆர் சிறைச்சாலையில் இருந்து புறப்பட்ட பின்னர், விடுவிக்கப்பட்ட கைதிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் அணிவகுப்பு நடந்தது.

பேருந்தைச் சுற்றி மக்கள் கூடிய நிலையில் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தியவாறு ஆரவாரம் செய்து கைதிகளின் வருகையைக் கொண்டாடினர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதி கைதிகளின் விடுதலையாகும்.

ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்தது.

முதற்கட்ட ஒப்பந்தத்தின்படி 33 பிணைக்கைதிகளை விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட கைதிகள், மேற்கு கரை மற்றும் ஜெருசலாமைச் சேர்ந்த 69 பெண்களும் 21 பதின்ம வயது ஆண்களும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)