பொது

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கூடுதலாக இரண்டு பயண சேவை

20/01/2025 06:16 PM

பட்டர்வர்த், 20 ஜனவரி (பெர்னாமா) -- சீனப் புத்தாண்டை முன்னிட்டு, கிரேத்தாப்பி தானா மலாயு நிறுவனம், கேதிஎம்பி ஒதுக்கிய இரண்டு லட்சத்து 70,000 டிக்கெட்டுகளில், இதுவரை இரண்டு லட்சத்து 10,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

மேலும், கோலாலம்பூரில் இருந்து பினாங்கு பட்டர்வர்த் செல்ல, நாள் ஒன்றுக்குக் கூடுதலாக இரண்டு பயண சேவையைக் கேதிஎம்பி வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

"அதனால்தான் அதிகமானவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை திரும்பும் பயணமாக இருப்பதால், கூட்ட நெரிசல் குறைவாக இருக்கலாம். ஒட்டுமொத்தமாக, வீடு திரும்புவதற்கான டிக்கெட்டுகளில் அதிகமானோர் கோலாலம்பூர் முதல் ஈப்போ(பேராக்) மற்றும் கேஎல்-பட்டர்வர்த்(பினாங்கு) ஆகிய இடங்களுக்கு அதிகம் செல்வதாக நாங்கள் கருதுகிறோம், " என்றார் அவர்.

இன்று, கேதிஎம்பியின் இஎம்யு மையத்தில், இதிஎஸ் வகுப்பு 93இன் ரயில், பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு திட்டம்,எம்ஆர்ஒவைப் போக்குவரத்து அமைச்சிடம் ஒப்படைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)