பொது

ஒவ்வொரு மலேசியரும் வாக்களிப்பதற்குத் தேர்தல் ஆணையம் வாய்ப்பளிக்க வேண்டும்

20/01/2025 04:41 PM

பிரஸ்ஸல்ஸ், 20 ஜனவரி (பெர்னாமா) -- வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கும் உள்நாட்டினர் போன்று தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமை இருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் எதிர்நோக்கும் அஞ்சல் வாக்குகள் தொடர்பான பிரச்சனை குறித்து முன்னதாக எஸ்பிஆர் எனப்படும் தேர்தல் ஆணையத்திடம் எழுப்பியிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் ஒரு சுயேட்சை அமைப்பாக இருந்தாலும் இந்த விவகாரம் குறித்த அவர்களிடம் பேசியுள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.

வாக்களிப்பதற்கு ஒவ்வொரு மலேசியருக்கும் தேர்தல் ஆணையம் வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியம், பிரஸ்ஸல்ஸில் புலம்பெயர்ந்த சுமார் 200 மலேசியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியின்போது அன்வார் அவ்வாறு கூறினார்.

ஒவ்வொரு முறையும் மலேசியாவில் தேர்தல் நடைபெறும்போது வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் எதிர்நோக்கும் சிரமம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது ஞாயிற்றுக்கிழமை தொடங்கு பெல்ஜியத்திற்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டிருக்கும் அன்வார் அவ்வாறு குறிப்பிட்டார்.

தூதரகம் மூலம் அல்லாமல், இதற்காக கூடுதலாக செலவானாலும் மக்கள் வந்து வாக்களிப்பதற்குச் சில வழிமுறையைப் பயன்படுத்துமாறு அவர் ஆலோசனை வழங்கினார்.

தேர்தல் ஆணையமும் தமது பரிந்துரையை ஏற்றுக் கொண்டதாக அன்வார் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)