விளையாட்டு

ஆஸ்திரேலிய பொது பூப்பந்து போட்டி; காலிறுதியில் சின்னர்

20/01/2025 06:59 PM

சிட்னி, 20 ஜனவரி (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது பூப்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் இத்தாலியின் யென்னிக் சின்னர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

நடப்பு வெற்றியாளரான அவர் தமது பட்டத்தைக் தற்காத்துக் கொள்ளும் இலக்கில் சரியாக பயணித்துக் கொண்டிருக்கின்றார்.

உலகின் முதன்நிலை ஆட்டக்காரரான யென்னிக் சின்னர், இந்த ஆட்டத்தில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனைச் சந்தித்தார்.

முதல் இரு செட்களை அவ்விருவரும் 6-3, 3-6 என்று மாறி மாறி ஆக்கிரமித்தனர்.

அதனை அடுத்த இரு செட்களை 6-3 , 6-2 என்று சின்னரே கைப்பற்றி காலிறுதியில் கால் வைத்துள்ளார்.

இதனிடையே, ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் எலெனா ரைபகினா அதிர்ச்சி தோல்வி கண்டுள்ளார்.

கடந்த முறை இப்போட்டியில் இறுதியாட்டம் வரை முன்னேறிய அவரைக் காலிறுதிக்கு முன்னரே இம்முறை தடுத்தி நிறுத்தினார் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்.

உலகத் தர வரிசையில் 19-வது இடத்தில் உள்ள மேடிசன் கீஸ், 6-3, 1-6 மற்றும் 6-3 என்ற நிலையில் வெற்றிப் பெற்று நான்காவது முறை காலிறுதிக்குத் தகுதிப் பெற்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)