பொது

MEUFTAவின் பேச்சு வார்த்தை மீண்டும் தொடரப்பட்டுள்ளது

20/01/2025 06:40 PM

பிரஸ்ஸல்ஸ், 20 ஜனவரி (பெர்னாமா) -- மலேசியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமான சுயேட்சை வாணிப ஒப்பந்தம்,

MEUFTAவின் பேச்சு வார்த்தை மீண்டும் தொடரப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும், ஐரோப்பிய ஒன்றிய அதிபர் உருசுல வொண்டர் லேயனும் அறிவித்துள்ளனர்.

இதன்வழி, அவ்விரு தரப்புக்கும் இடையிலான இருவழி உறவுக்கான வரலாற்று தருணம் உருவாகியுள்ளது.

2025ஆம் ஆண்டு, ஜனவரி 19 லிருந்து 20ஆம் தேதி வரைக்குமான நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வாரின் பெல்ஜியம், பிரஸ்ஸல்ஸ்கான பயணத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சு வார்த்தை தொடரப்பட்டது, மலேசிய பொருளாதாரத்திற்கும் உலகின் மிகப்பெரிய வர்த்தக பகுதிகளில் ஒன்றுக்குமான தொடர்பை வலுப்படுத்தும் முயற்சியில் முக்கிய அடைவுநிலையைக் காட்டுகிறது.

அதோடு, மலேசியாவுக்கான வர்த்தக பங்காளி மற்றும் முதன்மை முதலீட்டாளர்கள் இடையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் மேலும் நெருக்கமான உறுதிப்பாட்டைப் பிரதிபலிப்பதாக பிரதமர் துறை அலுவலகம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)