மெல்பர்ன், 21 ஜனவரி (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயினின் பௌலா படோசா தேர்வாகினார்.
இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் பௌலா படோசா அமெரிக்காவின் கோகோ காஃப்புடன் விளையாடினார்.
அமெரிக்காவின் முன்னணி ஆட்டக்காரரான கோகோ காஃப் இவ்விளையாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை.
எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளாமல் 7-5, 6-4 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்று 27 வயதான படோசா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதனிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் தோமி பாலும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவும் மோதினர்.
இவ்வாட்டம் இருவருக்குமே சவலாக அமைந்தது.
முதல் இரண்டு செட்களில் 7-6 7-6 என்று ஸ்வெரெவ் வெற்றி பெற்றாலும், மூன்றாம் செட்டில் 6-2 என்ற புள்ளிகளில் தோல்வியடைந்தார்.
இருப்பினும், வெற்றியாளரை நிர்ணயிக்கும் நான்காம் செட்டில் 6-1 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று ஸ்வெரெவ் அரையிறுதிக்கு தேர்வாகினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)