உலகம்

அரசியலமைப்பு நீதிமன்ற விசாரணையில் யூன் பங்கேற்பு

21/01/2025 05:31 PM

தென் கொரியா, 21 ஜனவரி (பெர்னாமா) --   தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோல் இன்று அரசியலமைப்பு நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்டார்.

அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர், தமது வழக்கை வாதிடவோ அல்லது இராணுவச் சட்டம் அறிவிப்பு தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கவோ வாய்ப்பிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு வந்திருக்கும் யூன் சுக் யோல் அந்த நீதிமன்றத்தின் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிப்பதாக உறுதியளித்திருந்தார்.

கடந்த டிசம்பர் தொடக்கத்தில் தென் கொரியாவில் இராணுவ ஆட்சியை அறிவித்தது தொடர்பில் விசாரணக்காக கைது செய்யப்பட்ட அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பு கடமைகளை மீறியதாக குற்றம் சாட்டி, அவர் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அந்த தீர்மானத்தை மறுஆய்வு செய்ய அரசியலமைப்பு நீதிமன்றம் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதியிலிருந்து விசாரணையைத் தொடங்கியது.

பதவியில் இருந்து நிரந்தரமாக அவரை நீக்குவதையும் அல்லது மீண்டும் பதவியில் அமர்த்துவதையும் நீதிபதிகள் முடிவு செய்வார்கள்.
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)