வாஷிங்டன், 21 ஜனவரி (பெர்னாமா) -- இதனிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்ட டொனல்ட் டிரம்ப் தமதுரையில் அதிரடியாக பல அறிவிப்புகளைச் செய்துள்ளார்.
அதில், உலக சுகாதார நிறுவனம் WHO-வில் இருந்து அமெரிக்கா விலகும் முடிவை டிரம்ப் எடுத்துள்ளார்.
கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பிற அனைத்துலக சசுகாதார நெருக்கடிகளை நிர்வகிக்க WHO தவறிவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
''எனவே, நாங்கள் 500 மில்லியன்னை உலக சுகாதார நிறுவனத்திற்குச் செலுத்தினோம். நான் இங்கு இருந்தபோது அதை முடித்துவிட்டேன். 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனா. எங்களுக்கு 350 இருக்கிறது. நம்மிடம் என்ன இருக்கின்றது என்று யாருக்கும் தெரியாது. ஏனெனில், நிறைய பேர் சட்டவிரோதமான முறையில் உள்ளே வந்தனர். ஆனால், நம்மிடம் 325 பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவர்களிடம் 1.4 பில்லியன் இருக்கின்றது. அவர்கள் 39 மில்லியன் செலுத்தினால். நாம் 500 மில்லியன் செலுத்துகிறோம். என்னை பொருத்தவரை சற்று நியாயமற்றதாக தெரிகின்றது. அது காரணமல்ல. ஆனால் நான் வெளியேறிவிட்டேன். அவர்கள் 39 மில்லியனுக்கு என்னை திரும்ப அழைத்தார்கள். கோட்பாட்டளவில் அது அதை விடக் குறைவாக இருக்க வேண்டும். ஆனால், உங்களுக்கு தெரியுமா, பைடன் திரும்ப வந்தபோது அவர்கள் 500 மில்லியனுக்கு திரும்ப வந்தார்கள்'', என்று அவர் கூறினார்.
கொவிட் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக WHO நடந்து கொள்வதாக முன்பே குற்றம் சாட்டியிருந்த டிரம்ப், தனது அடிப்படை பணியினைச் செய்ய தவறிய அந்நிறுவனத்தைச் சாடியுள்ளார்.
WHO-வில் இருந்து அமெரிக்கா வெளியேறும் நிர்வாக உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டார்.
இதனிடையே, அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் சுமார் 80 நிர்வாகச் செயல்களைச் தவிர்க்கத் தாம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தில் பெரிய மாற்றங்களைச் செய்வதாகவும் அவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து, அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றம் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும் என்று கூறிய அவர், அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசர நிலையைப் பிரகடனம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தவிர விரைவில் மெக்சிகோ வளைகுடாவின் பெயர் " அமெரிக்க வளைகுடா" என மாற்றப்படும் என்றார் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டி அனைவரையும் ஒன்றிணைக்கும் தலைவராக தாம் இருப்பேன் என்று டிரம்ப் தனது தொடக்க உரையில் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)