உலகம்

உயர்நிலைப்பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 16 வயது மாணவர் பலி

23/01/2025 07:07 PM

நேஷ்வில்லெ, 23 ஜனவரி (பெர்னாமா) -- நேற்று பதின்ம வயது மாணவர் ஒருவர், அமெரிக்கா நேஷ்வில்லெ உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவரை சுட்டு வீழ்த்தியப் பின்னர், மற்றொருவரையும் காய்ப்படுத்தி, இறுதியில், தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

17 வயதுடைய சாலமன் ஹென்டர்சன் என்பவர், அந்தியோகியா உயர்நிலைப் பள்ளியில் உள்ள உணவகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

அத்தாக்குதலில் 16 வயதுடைய ஜோசலின் கொரியா எஸ்கலான்ட் என்ற மாணவர் கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்தில் காயமுற்ற 17 வயதுடைய மற்றொரு மாணவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.

இச்சம்பவதிற்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)