பொது

அபராதத்திற்கான சிறப்புக் கழிவின் வழி 1 கோடி டிங்கிட்டிற்கும் மேலான வசூல் - ஜே.பி.ஜே

25/01/2025 06:25 PM

கிளந்தான், 25 ஜனவரி (பெர்னாமா) -- அபராதத்திற்கு 150 ரிங்கிட் சிறப்பு கழிவை வழங்கியதன் வழி 20 லட்சம் பேரிடமிருந்து, நிலுவையில் இருந்த ஒரு கோடியே 25 லட்சம் ரிங்கிட் சம்மன் தொகையை சாலைப் போக்குவரத்து துறை, ஜேபிஜே வசூலித்துள்ளது.

அவாஸ்-சம்மன் 53A எனப்படும் தானியங்கி விழிப்புநிலை பாதுகாப்பு அமைப்பு, 114 விசாரணை அறிவிக்கை மற்றும் 115 ஒட்டப்படும் அபராத அறிவிக்கை ஜேபிஜே உட்பிரிவு P 23 உள்ளிட்ட, மூன்று வகை குற்றங்களுக்கு சிறப்பு கழிவு வழங்கப்படுவதாக, ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார்.

''மலேசியர்கள் செலுத்திய சம்மன் தொகை மூலம் மொத்தம் 83,000 சம்மன்கள் தீர்க்கப்பட்டுள்ளன. எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து மலேசியர்களையும் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில், சிறப்புக் கழிவு இந்த ஆண்டு வரை மட்டுமே அளிக்கப்படும்,'' என்றார் அவர்.

சம்மன்கள் செலுத்தப்படாத பட்சத்தில், அவை முழுமையாகச் செலுத்தப்படும் வரையில், சம்பந்தப்பட்ட ஒருவர் கட்டுப்பாடு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவரின் பெயர் கருப்புப்பட்டியலிடப்படும் என்றும் ஏடி ஃபட்லி விவரித்தார்.

அதேபோல, நிலுவையில் உள்ள சம்மன்களைச் செலுத்தத் தவறுபவர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தையும் சாலை வரியையும் புதுப்பிக்க தடை விதிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)