புதுடெல்லி, 26 ஜனவரி (பெர்னாமா) -- ஒரே நாடு ஒரே தேர்தல் முறை இந்தியாவுக்கு அவசியம் என்று அந்நாட்டின் அதிபர் திரவுபதி முர்மு தெரிவித்திருக்கிறார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை வழி அந்நாட்டில் நிலைத்தன்மையை ஊக்குவிக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
நாட்டின் நிர்வாகத்தை மறுவரையறை செய்யும் திறனை அது கொண்டுள்ளதாகவும் திரவுபதி விளக்கினார்.
இந்தியாவின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு வழங்கிய உரையில் திரவுபதி அவ்வாறு கூறினார்.
முன்னதாக, இன்று புதுடெல்லி நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பை அவர் பார்வையிட்டார்.
இவ்விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அவரின் அமைச்சரவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
குடியரசு தின விழாவையொட்டி டெல்லி முழுவதும் 70 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள், 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)