விளையாட்டு

இபிஎல்: நான்காம் இடத்தை தற்காத்தது செல்சி

04/02/2025 07:19 PM

லண்டன், 04 பிப்ரவரி (பெர்னாமா) --இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண காற்பந்து போட்டியின், இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில், செல்சி 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெஸ்த் ஹெமைத் தோற்கடித்தது.

லீக் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்க Chelsea-யின் முயற்சியில், அதன் நிர்வாகி என்ஸோ மாரெஸ்காவுக்கு இது ஒரு முக்கியமான வெற்றியாகும்.

சொந்த அரங்கில், 35 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடிய செல்சி முதல் பாதி ஆட்டம் வரை கோல் அடிப்பதில் கடும் சவாலை எதிர்கொண்டது.

முதல் பாதி ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் West Ham அதன் ஒரே கோலை அடித்து
1-0 என்று செல்சியை அதிர்ச்சி அடைய வைத்தது.

ஆயினும், இரண்டாம் பாதியில் தனது ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்த செல்சி
64-வது நிமிடத்தில் அதன் முதல் கோலைப் போட்டது.

பின்னர், 74-வது நிமிடத்தில், வெஸ்த் ஹெம் அடித்த சொந்த கோலினால், செல்சிக்கு இரண்டாவது கோல் கிடைத்து ஆட்டம் 2-1 என்று அதற்கு சாதகமாய் முடிந்தது.

இந்த வெற்றியின் வழி, 43 புள்ளிகளோடு பட்டியலில் அது நான்காம் இடத்தில் இருக்கும் வேளையில்...

ஐந்தாம் இடத்தில் உள்ள நடப்பு வெற்றியாளரான மென்செஸ்டர் சிட்டி தற்போது செல்சியைப் பின்னுக்குத் தள்ளும் வேட்கையில் இருக்கின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)