கோலாலம்பூர், 04 பிப்ரவரி (பெர்னாமா) - ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் கல்வியை பாதியிலேயே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கல்வி துணையமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 13,007-ஆகக் குறைந்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 21,748ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் பதிவான எண்ணிக்கையில் 2,873 பேர் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர்.
இதில் 883 பேர் ஆரம்பப் பள்ளி, 1,990 பேர் இடைநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்களாவர்.
அனைத்து மட்டங்களிலும் பள்ளிப் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும், மேலும் விரிவான சிறப்பு மாதிரிப் பள்ளிகள் கே9, கே 11 பள்ளிகளை மேலும் சேர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று ரந்தாவ் பஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி ஜைலா முகமட் யூசோஃப் இன்று மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது வோங் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]