காசா, 26 ஜனவரி (பெர்னாமா) -- போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியிருப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பாலஸ்தீனர்கள் வீடு திரும்புவதற்காக திறக்கப்பட்ட வட காசாவில் உள்ள ஒரு நுழைவாயில் மூடப்பட்டது.
காசாவிற்குச் செல்வதற்கான நுழைவாயில் மூடப்பட்டதால், இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான காசா மக்கள் நுழைவாயில் அருகே காத்திருக்கின்றனர்.
ஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பிணை பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பும், சிறைகளில் வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை இஸ்ரேலும் விடுவிக்க ஒப்புக்கொண்டன.
அதனை தொடர்ந்து, நேற்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹாமாஸ் விடுவித்த நிலையில் சிறையில் வைக்கப்பட்ட 200 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்தது.
ஹமாஸ் தரப்புக்கும் இஸ்ரேலுக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டிருப்பதால் போர் நிறுத்த ஒப்பந்தம் கேள்விக் குறியாகியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)