மெல்பர்ன், 27 ஜனவரி (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் வெற்றியாளர் பட்டத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இத்தாலியின் யென்னிக் சின்னர் தற்காத்துக் கொண்டார்.
நடப்பு வெற்றியாளரான அவர், நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சண்டர் ஸ்வேரவைத் தோற்கடித்து, மூன்றாம் கிராண்ட்ஸ்லாமை வென்றுள்ளார்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டியில், ஆடவருக்கான இறுதி ஆட்டத்தில் யென்னிக் சின்னர் அலெக்சண்டர் ஸ்வேரவ் உடன் களம் கண்டார்.
உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள அவர், கடும் சவாலுக்குப் பின்னர் இந்த ஆட்டத்தை 6-3, 7-6 மற்றும் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிக்கொண்டார்.
கடந்த ஆண்டு சின்சினாட்டி பொது டென்னிஸ் போட்டியில் இருந்து, சின்னர் தொடர்ந்து வெற்றியைப் பதிவு செய்து வரும் நிலையில் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
2024 ஆஸ்திரேலியா பொது டென்னிஸ் பட்டத்துடன், அமெரிக்க பொது டென்னிஸ் பட்டத்தையும் கைப்பற்றிய அவர் தற்போது மீண்டும் ஆஸ்திரேலியா பட்டத்தை தற்காத்துக்கொண்டிருக்கின்றார்.
இத்தாலியைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஒருவர் தொடர்ந்து மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுவரை மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதி ஆட்டம் வரை முன்னேறிய அலெக்சண்டர் ஸ்வேரவ் இம்முறையும் தோல்வியை தழுவினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)