பொது

பிரதமருடன் காலை உணவை உட்கொண்ட மாமன்னர்

26/01/2025 02:56 PM

கோலாலம்பூர், 26 ஜனவரி (பெர்னாமா) --   இன்று காலை, கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள உணவகம் ஒன்றில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இணைந்து, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் காலை உணவை உட்கொண்டார்.

Semua House-இல் உள்ள உணவகம் ஒன்றில் பிரதமருடன் இணைந்து Nasi Lemak உட்கொண்டதாக, சுல்தான் இப்ராஹிமின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

அக்காலை பொழுதில், பொதுமக்கள் சிலருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், அங்குள்ள சிறுவர்களுடன் நலம் விசாரித்து, தமது நேரத்தையும் சுல்தான் இப்ராஹிம் செலவிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)