பொது

பள்ளி இடைநிற்றலை களைய அரசு சாரா அமைப்புகள் உதவ வேண்டும்

26/01/2025 03:01 PM

ஜாலான் யாக்கோப் லத்திஃப், 26 ஜனவரி (பெர்னாமா) --   பிள்ளைகளின் பள்ளி தயார்நிலை தேவைகளில் பெற்றோரின் சுமையைக் குறைக்கும் வகையில் உதவிக்கரம் நீட்டும்படி தனியார் நிறுவனங்களும் அரசு சாரா அமைப்புகளும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

மாணவர் இடைநிற்றல் பிரச்சனையை நிவர்த்தி செய்யும் அரசாங்கத்தின் இலக்கிற்கு இவ்வுதவி மறைமுகமாக ஆதரவளிக்கும் என்று, பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

"நாங்கள் அவர்களை ஊக்குவிக்கிறோம். இன்னும் பலர் முன்வந்து எங்களுக்கு உதவ வேண்டும். ஏனெனில், நாம் கடந்து செல்வது நமது நாட்டின் முன்னேற்றம் தான். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ, இலக்கவியல் மற்றும் அனைத்து துறைகளும். எனவே, நம் பிள்ளைகள் அந்தத் துறைகளில் கல்வி கற்க நாம் நிபுணத்துவம் பெற வேண்டும்", என்றார் அவர்.

அதோடு, பிள்ளைகள் உயர்க்கல்வியைத் தொடரும் வரை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் டாக்டர் வான் அசிசா அறிவுறுத்தினார்.

இன்று, கோலாலம்பூர், பண்டார் துன் ரசாக்கில் நடைபெற்ற மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)