பொது

ஒற்றுமையைப் பிளவுபடுத்தும் விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டாம் - பிரதமர்

31/01/2025 06:48 PM

ஈப்போ, 31 ஜனவரி (பெர்னாமா) -- ஒற்றுமையைப் பிளவுபடுத்தும் விவகாரங்களில் கவனம் செலுத்தாமல், நாட்டின் முன்னேற்றம் மற்றும் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அனைத்து மலேசியர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இன ஒற்றுமைக்கு மலேசியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

''இந்நாட்டிற்கு நல்ல ஆற்றல் உள்ளது. சண்டையிட வேண்டிய அவசியமில்லை, அனைவரின் கண்ணியத்தையும் உயர்த்துங்கள்'' என்றார் பிரதமர். 

இந்நாட்டில் பல்வேறு இனங்கள் பிற இனங்களின் பண்டிகைகளைக் கொண்டாடுவது குறித்து கேள்வி எழுப்பும் சில தரப்பினரின் செயல்களையும் அன்வார் விமர்சித்துள்ளார்.

''மலாய்க்காரர்கள் சீன பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். சீனர்கள் மலாய்க்காரர்கள் தைப்பூசத்திற்குச் செல்வதைக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. பல தசாப்தங்களாக பிரச்சினையாக இல்லாத அனைத்தும் இப்போது பிரச்சினையாக இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் நாம் அதைக் கேட்க விரும்புகிறோமா அல்லது நமது ஒற்றுமையில் கவனம் செலுத்த விரும்புகிறோமா? கருத்து வேறுபாடுகளைத் தொடர விரும்புகிறோமா அல்லது ஒற்றுமையை வலுப்படுத்த விரும்புகிறோமா? நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்க விரும்புகிறோமா? கூறினார் பிரதமர்

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தை கையாள மக்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இது, உலக நாடுகள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவின உயர்வு குறித்து அரசாங்கம் மிகவும் அக்கறை கொண்டுள்ளது என்பதை நிரூபிப்பதாக அன்வார் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை, பேராக் ஈப்போவில் நடைபெற்ற பேராக் சீன வர்த்தக மற்றும் தொழில் சபையின் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, அன்வார் அந்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)