பொது

சரவாக்கில் வெள்ளத்தை நிர்வகிக்க 23,000 அதிகாரிகளும் உறுப்பினர்களும் அனுப்பப்பட்டுள்ளனர்

01/02/2025 06:10 PM

சரவாக், 01 பிப்ரவரி (பெர்னாமா) -- சரவாக்கில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை நிர்வகிக்கும் பொருட்டு, தரை உபகரணங்கள் 526 உட்பட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 23,000 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அம்மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடல் அல்லது நதிகளில் பயன்படுத்தக்கூடிய 214 உபகரணங்கள், ஆகாய உபகரணங்கள் 15 உட்பட 269 கூடுதல் உபகரணங்கள் அவற்றில் அடங்கும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

அதோடு, தரை உபகரணங்கள் 977, நீர் வழி உபகரணங்கள் 463 மற்றும் ஆகய உபகரணங்கள் 16 உட்பட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 14,209 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் சபாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய பேரிடர் நிர்வகிப்பு செயற்குழுவின் தலைவருமான டாக்டர் அஹ்மட் சாஹிட் கூறினார்.

இன்று நண்பகல் மணி 12 நிலவரப்படி, சரவாக் மற்றும் சபா மாநிலங்களில் 26 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,009 பேராக உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)