சபா, 01 பிப்ரவரி (பெர்னாமா) -- சபாவில், மூன்று மாவட்டங்களில் ஏற்பட்டிருந்த வெள்ளம் சீரடைந்ததைத் தொடர்ந்து, அதில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோத்தா மருடு, கோத்தா பெலுட் மற்றும் தெலுபிட் ஆகிய மாவட்டங்கள், வெள்ள நிலைமையில் இருந்து முழுமையாக சீரடைந்துள்ளதாக மாவட்ட அதிகாரிகள் இன்று அறிவித்தனர்.
சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் பேரிடர் நிர்வகிப்பு செயற்குழுவின் தலைவர்களுமான அந்த மாவட்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட கண்ணோட்டத்தின் அடிப்படையில் அந்த அறிவிப்பைச் செய்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள், சீரான வானிலை மற்றும் முழுமையாக வடிந்த வெள்ளம் ஆகியவற்றை கண்காணித்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தகவல்களின் அடிப்படையில் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களும் மூடப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)