உலகம்

வருடாந்திர வரவு செலவு திட்டம்; தனிநபர் வரி விகிதம் குறைப்பு

02/02/2025 04:45 PM

புது டெல்லி, 02 பிப்ரவரி (பெர்னாமா) --   இந்தியா, நேற்று தாக்கல் செய்த தனது வருடாந்திர வரவு செலவு திட்டத்தில் தனிநபர் வரி விகிதங்களைக் குறைத்துள்ளது.

புதிய கட்டணத் தடைகளுக்குச் சாத்தியம் உள்ளதால், உலகளாவிய பொருளாதாரம் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் உள்நாட்டு தேவையை அதிகரிப்பதில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார பலத்தைக் கொண்டுள்ள இந்தியா கவனம் செலுத்துகிறது.

ஆண்டுக்கு 12 லட்சத்து 80 ஆயிரம் இந்திய ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்நடவடிக்கை மூலம் நாட்டின் கருவூல வருமானத்தில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் கோடி இந்திய ரூபாய் வரை சேகரிக்கலாம்.

ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு உதவும் நடவடிக்கைகளும் 2025-2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான பணிகளை அரசாங்கம் தொடங்கும் என்றும் சீதாராமன் கோடி காட்டினார்.

அதைத் தவிர்த்து, தேசிய பாதுகாப்பு செயலகத்தின் நிர்வாக செலவுகள், விண்வெளி திட்ட செலவுகள், பிரதமர் அலுவலகத்தின் நிர்வாக செலவுகள், அரசு விருந்தினர்களின் உபசரிப்பு மற்றும் பொழுதுபோக்குகளுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக மத்திய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)