உலகம்

துணை ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கில் அசிம் முனிர் கலந்து கொண்டார்

02/02/2025 05:14 PM

குவேட்டா, 02 பிப்ரவரி (பெர்னாமா) --   தென்மேற்கு பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு உயிரிழந்த 18 துணை ராணுவ வீரர்களின், குவேட்டாவில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் அந்நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனிர் கலந்து கொண்டார்.

இச்சண்டையில் மேலும் 24 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

அதில், மூத்த பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில், பலுசிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை குறித்து முனிருக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

முனிர், உயிழந்த வீரர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தியதோடு, குவெட்டாவில் உள்ள ஒருங்கிணைந்த இராணுவ மருத்துவமனையில் காயமடைந்தவர்களையும் சந்தித்தார்.

பலுசிஸ்தானில் இரவு முழுவதும் தீவிரவாதிகள் சாலைத் தடைகளை அமைக்க முயன்றபோது, பாதுகாப்புப் படையினர் அவற்றை அகற்ற முயன்றதைத் தொடர்ந்து சண்டை மூண்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகள் எந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

இந்தத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)