செகிஞ்சான், 04 பிப்ரவரி (பெர்னாமா) -- பண்டிகை காலங்களில் அரசாங்கத்தால் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட இலவச டோல் சேவைக்குப் பதிலாக இவ்வாண்டு முழுவதிலும் பண்டிகை காலத்தின்போது டோல் கட்டணத்தில் 50 விழுக்காட்டு கழிவு வழங்கப்படும்.
இதன்வழி, ஆண்டுக்கு சுமார் எட்டு கோடி ரிங்கிட் வரை அரசாங்கம் சேமிக்க முடியும் என்றும் இலவச டோல் சேவை வழங்கப்படும் பட்சத்தில் 10 கோடி ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியை அரசாங்கம் செலவிட வேண்டியிப்பதாக பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
சிலாங்கூர், Jalan Persekutuan சுங்கை பெசார் - சபாக் பெர்னாமிற்கு அலுவல் பயணம் மேற்கொண்டிருந்தபோது டத்தோ ஶ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இதற்கு முன்பு செயல்படுத்தப்பட்டது போலவே, ஆண்டுக்கு எட்டு நாள்களுக்கு அமல்படுத்தப்படும் இந்தத் கழிவு, இலக்கிடப்பட்ட உதவி அணுகுமுறைக்கு மாறுவதற்கான அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப உள்ளதாக அவர் கூறினார்.
சீன புத்தாண்டின்போது, மக்களுக்கு வழங்கப்பட்ட 50 விழுக்காடு கழிவு இன்னும் தேவைப்படுவதால் இந்த முன்னெடுப்பு அவசியமாக நந்தா தெரிவித்தார்.
எனவே, நோன்பு பெருநாள் காலத்திலும் அதற்குப் பிறகும் ஆண்டு முழுவதும் இந்த கழிவை தொடர்ந்து வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]