குளூஜ், 05 பிப்ரவரி (பெர்னாமா) -- உலகின் முன்னாள் முதன்நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹலெப் (SIMONA HALEP) டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இரு முறை கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளருமான அவர், சொந்த மண்ணில் நடைபெற்று வரும் குளூஜ்-நபோகா (CLUJ-NAPOCA) பொது டென்னிஸ் போட்டியில் தோல்வி கண்டதை அடுத்து இம்முடிவை எடுத்துள்ளார்.
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய சிமோனா ஹலெப் பின்னர் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான அனுமதியைப் பெற்றிருந்தார்.
இந்த பருவத்தின் முதல் போட்டியில் பங்கேற்ற அவரை, இத்தாலியின் லூசியா ப்ரோன்செட்டி (Lucia Bronzetti) 1-6 ,1-6 என்ற நேரடி செட்களில் வீழ்த்தியுள்ளார்.
ஒன்பது மாத இடைநீக்கத்திற்குப் பிறகு மீண்டும், டென்னிஸ் களத்திற்குத் திரும்பிய ஹலெப் முழங்கால் மற்றும் தோள்பட்டையின் ஏற்பட்ட காயங்கள் காரணமாக, தாமகதாக இப்பருவத்தைத் தொடங்கினார்.
33 வயதான அவர் மூன்று கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் தோல்வி கண்டார்.
மகளிர் ஒற்றையர் பிரிவின் உலக தரவரிசையில் 2017, 2018 ஆண்டுகளில் முதலிடம் வகித்த ஹலெப், 2018 பிரான்ஸ், 2019 விம்பிள்டன் தொடர்களில் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)