பொது

கல்வியின் முக்கியத்துவத்தை பிரதமர் தலைமையிலான அரசாங்கம் முன்னிறுத்துகிறது

10/02/2025 06:21 PM

பெட்டாலிங் ஜெயா, 10 பிப்ரவரி (பெர்னாமா) - சிறுவர்களின் நல்வாழ்வுக்கு உதவுவதில் வர்த்தக துறையின் ஈடுபாடு நாட்டின் எதிர்காலத்தின் முதுகெலும்பாகும்.

நாட்டின் வளர்ச்சியில் குறிப்பாக மேம்பட்ட மக்களை உருவாக்கும் பொருட்டு கல்வியின் முக்கியத்துவத்தை பிரதமர் தலைமையிலான அரசாங்கம் முன்னிறுத்துவதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறுகின்றார்.

பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வித் தேவைகளுக்காகச் சேமிக்கத் தொடங்குவதற்கான ஊக்குவிப்பாக சுங்கை பூலோ நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 600 மாணவர்களுக்கு தலா இருபது ரிங்கிட் வழங்கி Bank Rakyat-இன் கீழ் i-Nuri சேமிப்புக் கணக்கைத் திறப்பதற்கு டத்தோ ஶ்ரீ ரமணன் உதவி புரிந்தார். 

"பேங்க் ராக்யாட் வங்கியின் கீழ் செயல்படும் 'ஐ நூரி' திட்டம் சேமிப்புப் பழக்கத்தை வலியுறுத்துகிறது. இத்திட்டத்தில் அவர்களின் எதிர்காலத்திற்கும் கல்விக்கும் மிகவும் துணைப் புரிகிறது. இந்த வங்கிக் கணக்கை தொடங்குவதற்கு 20 ரிங்கிட் முன்பணம் செலுத்த வேண்டும். இன்று பதிவு செய்யும் அனைத்து பிள்ளைகளுக்கும் அந்தப் பணத்தை நான் தருகிறேன். கடந்தாண்டும் சுமார் ஆயிரம் பேருக்கு நான் இந்த வங்கிக் கணக்கை திறந்து தந்திருக்கிறேன்," என்று அவர் கூறினார்.

இன்று, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் மீண்டும் பள்ளிக்கு போகலாம் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)