பிரஸ்ஸல்ஸ் , 21 ஜனவரி (பெர்னாமா) -- அதிக காலநிலை நிதி, பசுமை முதலீடு, தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் மூலம், தென்கிழக்கு ஆசியாவுக்கான ஆதரவை வலுப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலவே மலேசியாவும் கால நிலை நெருக்கடியால், தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதைப் பிரதமர் ஒப்புக் கொண்டார்.
2025ஆம் ஆண்டு ஆசியான் தலைவராக பதவியேற்கும் வேளையில் நாட்டின் முக்கிய பங்களிப்புத் தளமாக புத்ராஜெயா இவ்வாண்டு நிலைத்திருப்பதையும் பிரதமர் உறுதிப்படுத்தினார்.
அதில் குறிப்பாக வளர்ச்சி, பொருளாதார விரிவாக்க உரிமை குறித்து சமரசம் ஏதுமின்றி வருங்கால பாதுகாப்பை முன்னிறுத்திய துணிச்சலான கூட்டு நடவடிக்கைக்கு இது வித்திட்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பொருளாதாரக் கண்ணோட்டமாக இருப்பினும், காலநிலை நிலை மாற்றமானது, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையிலான வெளிப்படையான ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்துகிறது. நிச்சயமாக, இதன் மோசமான விளைவை ஏற்படுத்தும், '' என்றார் அவர்.
இன்று பெல்ஜியம், ப்ரூஜஸுல் உள்ள ஐரோப்பா கல்லூரியில் சிறப்புரையாற்றிய போது அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)