வாஷிங்டன் டி.சி., 13 பிப்ரவரி (பெர்னாமா) - புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்கவின் தேசிய புலனாய்வு இயக்குநர் துல்சி கபார்ட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்தார்.
உளவுத்துறை மிகப்பெரிய அனுபவம் இல்லாத முன்னாள் அமெரிக்க பிரதிநிதியான கபார்ட், அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியை விட்டு வெளியேறிய கபார்ட், 2024ஆம் ஆண்டு டிரம்ப்பை ஆதரித்து குடியரசுக் கட்சியில் இணைந்தார்.
இன்று வெள்ளை மாளிகையில் டிரம்ப்புடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த இரண்டு நாள் அமெரிக்க பயணத்தின்போது, எரிசக்தி மற்றும் தற்காப்பு தொடர்பான இறக்குமதியை அதிகரிக்க அவர் பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார்.
டிரம்புடனான அவரின் சந்திப்பின் போது, வர்த்தகம் மற்றும் வரிச் சலுகைகள் குறித்த கலந்துரையாடல் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)