கோலாலம்பூர், 12 ஜூலை (பெர்னாமா) -- மலேசிய பூப்பந்து சங்கம், பி.ஏ.எம்-உடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள தேசிய மகளிர் இரட்டையரான பெர்லி டான் - எம்.தினா, பயிற்சி மற்றும் போட்டிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ அறிவுறுத்தியுள்ளார்.
பி.ஏ.எம்-உடன் நீடித்து வந்த ஒப்பந்தம் தொடர்பான சிக்கல் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டதை தாம் வரவேற்பதாக அவர் கூறினார்.
விளையாட்டாளர்களின் நலன் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பி.ஏ.எம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர் நன்றித் தெரிவித்தார்.
ரோட் டு கோல்ட் (ஆர்.தி.ஜி) திட்டத்தில் பெர்லி டான் - எம்.தினா இணைந்துள்ளதால், அவர்கள் எதிர்வரும் போட்டிகளில் வெற்றி அடைய அது உதவும் என்று ஹன்னா கூறினார்.
2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி வரை பெர்லி டான் - எம்.தினா, பி.ஏ.எம்-உடன் இணைந்திருப்பார்கள்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)