Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

முதல் முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு ஜோகோவிச் தேர்வாகவில்லை

12/07/2025 05:06 PM

லண்டன், 12 ஜூலை (பெர்னாமா) -- எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு நோவக் ஜோகோவிச் தேர்வாகவில்லை.

நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், அவர் யான்னிக் சின்னரிடம் தோல்வி கண்டார்.

முந்தைய இரண்டு விம்பிள்டன் போட்டிகளிலும், இத்தாலியின் யான்னிக் சின்னர், ஜோகோவிசிடம் தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இம்முறை ஜோகோவிசின் அனுபவமும் ஆட்டத் திறனும் 23 வயதான சின்னரிடம் எடுபடவில்லை.

ஏழு முறை  விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ள 38 வயதான ஜோகோவிச், நேற்றைய ஆட்டத்தில் 6-3 6-3 6-4 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டார்.

இறுதி ஆட்டத்தில் சின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராசுடன் மோதவுள்ளார்.

இதனிடையே, ஆடவருக்கான மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், கார்லோஸ் அல்கராசும் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்சும் களம் கண்டனர்.

இவ்வாட்டத்தில், 6-4 5-7 6-3 7-6 என்ற புள்ளிகளில் கார்லோஸ் வெற்றி பெற்றார்.

நாளை நடைபெறவிருக்கும்  யான்னிக் சின்னருக்கும் கார்லோஸ் அல்கராசுக்குமான இறுதி ஆட்டத்தை டென்னிஸ் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)