புத்ராஜெயா, 27 பிப்ரவரி (பெர்னாமா) -- தேசிய பாதுகாப்புத் துறையில் உள்ள எந்தவொரு தரப்பினரும் ஊழல் நடவடிக்கைகளிலும் அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபடுவதை தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தீர்க்கமாக கூறியிருக்கின்றார்.
அவ்வாறான செயல்கள், நம்பிக்கையை துரோகம் மட்டுமின்றி நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதியையும் சீர்குழைக்கும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
''இவ்விவகாரத்தில் மகிழ்ச்சியடையாதவர்களுக்கு, எந்த நிலையில் இருந்தாலும், எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நான் கருத்தில் கொள்ள மாட்டேன். தயவுசெய்து கேளுங்கள். நான் அதை அனுமதிக்க மாட்டேன். ஏனென்றால், இது துரோகச் செயல். மேலும், அது நமது தேசிய பாதுகாப்பு செயல்முறையையும் சேதப்படுத்தும்'', என்று அவர் கூறினார்.
இன்று புத்ராஜெயாவில், 2025-ஆம் ஆண்டு தேசிய Wakaf மாத தொடக்க விழாவில் உரையாற்றும்போது, பிரதமர் அவ்வாறு கூறினார்.
இவ்விவகாரம் தொடர்வதைத் தடுக்க, வெளிப்படையான கொள்முதல் செயல்முறைறையின் முக்கியத்துவத்தையும் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)