பொது

ஆசியான்: இன்று தொடங்கியது 31-வது ஏ.ஈ.எம்

28/02/2025 04:40 PM

டேசாரு, 28 பிப்ரவரி (பெர்னாமா) -- வட்டார பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் தற்போதைய அனைத்துலக புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்ளும் உத்திகளை மையமாகக் கொண்டு 31-வது ஏ.ஈ.எம் எனப்படும் ஆசியான் பொருளாதார அமைச்சர்கள் கூட்டம் இன்று, ஜோகூர், டேசாருவில் தொடங்கியது.

இவ்வாண்டு ஆசியான் மாநாட்டிற்கு மலேசியா தலைமையேற்கும் நிலையில் முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை, MITI அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ரூல் அப்துல் அசிஸ் தலைமைத் தாங்கும் இக்கூட்டம் அதன் முக்கிய அங்கங்களில் ஒன்றாகும்.

ஆசியான் வர்த்தக ஒப்பந்தம், ATIGA-வை மேம்படுத்துவது, ஆசியான் இலக்கவியல் பொருளாதாரக் கட்டமைப்பு ஒப்பந்தம், DEFA மற்றும் ஆசியான் அமைப்பில் திமோர் லெஸ்தேவின் பங்கேற்பு குறித்த முன்னேற்றம் ஆகியவை தொடர்பில் இதில் விவாதிக்கப்படும்.

கடந்த பிப்ரவரி 22 தொடங்கி இன்றுவரை, ஜோகூர், டேசாருவில் ஏ.ஈ.எம் மற்றும் அது தொடர்பிலான கூட்டங்கள் நடைபெறுகின்றன.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]