பொது

நெரிசல் கட்டணங்கள் 20% சாலை நெரிசலைக் குறைக்கக்கூடும்

27/02/2025 05:00 PM

நாடாளுமன்றம், 27 பிப்ரவரி (பெர்னாமா) --   நெரிசல் கட்டணங்களை அமல்படுத்துவதன் மூலம் கோலாலம்பூரில் சுமார் 20 விழுக்காடு சாலை நெரிசலைக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் ஆய்வு நிலையில் உள்ள அம்முயற்சியின் வெற்றியை உறுதிசெய்ய, நெரிசல் கட்டண விகிதம், பயனர்கள் ஒரு குறிப்பிட்ட பாதையில் செல்வதை ஊக்கப்படுத்தாத மதிப்பில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர், டாக்டர் சலிஹா முஸ்தாஃபா தெரிவித்தார்.

''ஆனால், கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டால், பயனர்கள் மீது சுமையை அதிகரிப்பதையும் அரசாங்கம் விரும்பவில்லை'', என்று அவர் கூறினார்.

இது செயல்படுத்தப்பட்டால் என்ன வகையான நெரிசல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை பயன்படுத்தப்படும் மற்றும் அரசாங்கத்தால் எதிர்பார்க்கப்படும் நெரிசல் குறைப்பின் அளவு குறித்து, இன்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு டாக்டர் சலிஹா அவ்வாறு பதிலளித்தார்.

2020-ஆம் ஆண்டில் Prasarana Malaysia நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், சாலை நெரிசல் காரணமாக 2,000 கோடி இழப்பை நாடு சந்தித்ததது கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)