பொது

புயல் வீசியதில் 8 வீடுகள் சேதம்

06/03/2025 07:20 PM

சபாக் பெர்னாம், 06 மார்ச் (பெர்னாமா) -- இன்று காலை மணி ஏழு அளவில், சபாக் பெர்னாம், செகின்சான், ஜாலான் பான் லெசென் பாரிட் நான்கில் வீசிய புயல் காற்றினால், அங்குள்ள எட்டு வீடுகள் சேதமடைந்தன.

எனினும், இச்சம்பவத்தில் எவ்வித உயிருடற் சேதமும் ஏற்படவில்லை என்று, சிலாங்கூர் மாநில, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் காலை மணி 7.48-க்கு தங்கள் தரப்பிற்கு அழைப்பு கிடைத்ததை அடுத்து, செகின்சான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து அதிகாரிகள் உட்பட உறுப்பினர்கள் எண்மர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அஹ்மட் முக்லிஸ் கூறினார்.

இச்சம்பவத்தில் எட்டு வீடுகள் சேதமடைந்துள்ளதை இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நிலைமை சீராகும் வரையில் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை தமது தரப்பு கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)