பொது

விவசாய வடிகால் & நீர்பாசன அமைப்பைப் பராமரிக்க 5 கோடி ரிங்கிட்

06/03/2025 07:31 PM

கோலாலம்பூர், 06 மார்ச் (பெர்னாமா) -- விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சின் கீழ், இவ்வாண்டு நாடு முழுவதிலும் விவசாய வடிகால் மற்றும் நீர்பாசன அமைப்பைப் பராமரிக்க ஐந்து கோடியே 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்தத் தொகையில், ஒரு கோடியே 48 லட்சம் ரிங்கிட் கிழக்கு கடற்கரை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு  தெரிவித்தார்.

வெள்ளக் காலத்தின்போது குறிப்பாக கிழக்குக்கரை மாநிலத்தில், விவசாயத் துறையில் தாக்கத்தைக் குறைப்பதற்கான அமைச்சின் ஆக்கப்பூர்வமான தணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியே இம்முயற்சியாகும் என்று அவர் கூறினார்.

விவசாயத் துறையில் வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைக்க, நாட்டின் வானிலை அறிக்கை முறை இன்னும் துல்லியமாகக் கணிக்கக்கூடிய வகையில் மேம்படுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)