பொது

பாலர் பள்ளி பாடத்திட்டம் ஒப்பிடத்தக்கதாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்

06/03/2025 07:37 PM

கோலாலம்பூர், 06 மார்ச் (பெர்னாமா) -- பாலர் பள்ளி பாடத்திட்டம் தரமான, பொருத்தமான மற்றும் இதர நாடுகளின் பாடத்திட்டங்களுடன் ஒப்பிடத்தக்கதாகவும் இருப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது.

குழந்தை நிபுணர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மழலையர் பள்ளி நடத்துனர்கள் மற்றும் பெற்றோர்கள் போன்ற பல்வேறு தரப்பினரின் ஈடுபாட்டுடன், 2026-ஆம் ஆண்டு பாலர் பள்ளி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ  கூறினார்.

''இதன் சாத்தியக்கூறை உறுதி செய்வதற்காக, இப்பாடத்திட்டம் அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவன பாலர் பள்ளிகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் 34, கேபிஎம் பாலர் பள்ளிகள், ஐந்து KEMAS மழலையர் பள்ளிகள், மூன்று ஒருமைப்பாட்டு மழலையர் பள்ளிகள் மற்றும் எட்டு தனியார் மழலையர் பள்ளிகள் உள்ளடக்கியுள்ளன. கேபி 2026-இன் வலிமைக்காக, முன்னோடி சோதனை கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், துறையில் செயல்படுத்துபவர்களின் கருத்துகளையும் கணக்கில் கொண்டுள்ளது'', என்றார் அவர். 

மாணவர்களின் சாதனைத் திறனை செயல்படுத்தும் கனவு உண்மையிலேயே நிறைவடையும் வகையில், கல்வி அமைச்சு, KEMAS, பூர்வக்குடி மேம்பாட்டுத் துறை, JAKOA , தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய ஒருங்கிணைப்புத் துறை, JPNIN ஆகியவற்றில் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய பாடத்திட்ட கட்டமைப்பில் பயிற்சித் திட்டங்களும் வெளிப்பாடுகளும் எந்த அளவிற்கு கவனம் செலுத்துகின்றன என்று, இன்று மேலவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வோங் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)