லாஹாட் டத்து, 09 மார்ச் (பெர்னாமா) -- எதிர்வரும் 17-வது சபா மாநிலத் தேர்தலில் தனித்து போட்டியிட வாரிசான் கட்சி முடிவு செய்துள்ளது.
அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஷஃபியி அப்டாலை இன்று தொடர்பு கொண்ட போது அவர் அதனை உறுதிப்படுத்தினார்.
வாரிசானில் அதிகமான நிதி இல்லாவிட்டாலும், அக்கட்ச்சி இனத்தைப் பொருட்படுத்தாமல் தலைமைத்துவத்தை வழங்கும் என்று டத்தோ ஶ்ரீ முஹமட் ஷஃபியி அப்டால் கூறினார்.
சபாவின் 16-வது மாநிலத் தேர்தலில் வாரிசான் கட்சி 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இருப்பினும், அதன் சட்டமன்ற உறுப்பினர் சிலர் கட்சியை விட்டு விலகியதால் தற்போது 14 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே வாரிசான் கொண்டுள்ளது.
மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு அக்டோபர் வரை கால அவகாசம் உள்ளதாக அதன் முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் முன்னதாக கூறியிருந்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6.30 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]