கோலாலம்பூர், 10 மார்ச் (பெர்னாமா) -- 2008-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட செயல்பாட்டு நேர நீட்டிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் உள்ள 49 சிகிச்சையகங்கள் அதனைச் செயல்படுத்துகின்றன.
இத்திட்டத்தின் கீழ் திங்கள் முதல் வெள்ளி வரை, மாலை மணி 5 தொடங்கி இரவு மணி 9.30 வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 9 முதல் மதியம் 1 மணி வரையில் நீட்டிக்கப்பட்ட நேரம் நடைமுறைப்படுத்தப்படும்.
நேர நீட்டிப்பின் போது, 49 சிகிச்சையகங்களில், 43 சிகிச்சையகங்கள் 5 லட்சத்து 92 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளதாக, சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி கூறினார்.
"ஒரு நாளைக்கு ஏறக்குறைய 47 முதல் 50 நோயாளிகளின் வருகை உள்ளது. எஞ்சிய ஆறு சிகிச்சையகங்கள் STAR திட்டத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில், நேர நீட்டிப்பு செயல்பாட்டின் போது மாலை 5 முதல் இரவு 9.30 வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 9 முதல் மதியம் 1 மணி வரையிலும். அதோடு, 2024-ஆம் ஆண்டு பொது விடுமுறையின் போது 275-யிலிருந்து 473 நோயாளிகளின் வருகை கணிக்கப்பட்டுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு, STAR எனும் பொதுத்துறை சீர்திருத்தத் சிறப்புப் பணிக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 49 சிகிச்சையகங்களில் ஆறு, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக, லுகானிஸ்மான் கூறினார்.
இதனிடையே, மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் கருத்துகளுக்கு இணங்க, மாற்று வேலை நேரங்கள், WBB திட்டத்தைச் சுகாதார அமைச்சு மீட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)