Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

இங்கிலாந்து பயணமாகினர் ஆரோன் சியா - சோ வுய் இக் ஜோடியினர்

11/03/2025 05:21 PM

லண்டன், 11 மார்ச் (பெர்னாமா) --    ALL ENGLAND பூப்பந்து போட்டியில் களமிறங்கபோவதாக நாட்டின் தேசிய ஆடவர் இரட்டையரான ஆரோன் சியா - சோ வுய் இக் ஜோடி அறிவித்துள்ளது.

இப்போட்டியில் அந்த ஜோடி பங்கேற்கவில்லை என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தோள்பட்டை காயத்தால் ஆரோன் சியா  அவதிப்படுவதாக முன்னதால கூறப்பட்டதால், ALL ENGLAND போட்டில் அந்த இணை விளையாடாது என்ற யூகம் கிளம்பியது.

ஆனால், அவர்கள் போட்டியிடுவதை ஆடவர் இரட்டையரின் தலைமை பயிற்றுநர் ஹெரி இமான் பியர்ங்காடி உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று கிடைத்த தகவலிபடி, பேர்மிங்காமில் நாளை தொடங்கும் போட்டியில் ஆரோன் சியா விளையாட முடியும் என்பது உறுதியாகி உள்ளது.

இருப்பினும், விசா பிரச்சனை காரணமாக ஹெரி இமான் இரட்டையர் பூப்பந்து அணியுடன் இங்கிலாந்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாளை தொடங்கும் ஆட்டத்தில் ஆரோன் - வுய் இக் ஜோடி டென்மார்க்கின் ராஸ்மஸ் கஜேர்-ஃபிரடெரிக் சோகார்ட் இணையுடன் மோதுகின்றது.

2019 மற்றும் 2024 ஆண்டுகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்த ஜோடி, மீண்டும் தங்களை நிரூபிக்க இங்கிலாந்துக்குப் பயணமாகியுள்ளனர்.

கடந்த வாரம் பிரான்சில் நடந்த 2025 ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் (Orleans Masters) பூப்பந்து போட்டியின் தொடக்க சுற்று ஆட்டத்தின் போது, ஆரோனின் தோள்பட்டை காயம் காரணமாக அந்த ஜோடி பாதியிலேயே வெளியேறியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)