கொழும்பு, 13 மார்ச் (பெர்னாமா) -- இன்று, இலங்கை, கொழும்புவில் நாடளவிலான வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று முன்தினம், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையிலிருந்த பெண் வைத்தியர் ஒருவர்
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தத்திற்கான போராட்டம் நடைபெறுகின்ற போதிலும், அவசர மருத்துவ சேவைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, குழந்தைகளுக்கான வைத்தியசாலைகள், மகப்பேறு மருத்துவமனைகள், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், தேசிய மனநல நிறுவனம், முப்படை வைத்தியசாலைகளிலும், இந்த வேலைநிறுத்த போராட்டத்தைச் செயல்படுத்த வேண்டாம் என்று, அச்சங்கம் தீர்மானித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)