Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

கிழக்கு ஜாவாவில், கப்பல் வெடித்து சிதறியதில் இருவர் பலி, 15 பேர் காயம்

13/03/2025 07:37 PM


ஜகார்த்தா, 13 மார்ச் (பெர்னாமா-சின்ஹுவா) -- இந்தோனேசியாவின் வடக்கு கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு கடலோர நகரமான லாமோங்கன் அருகே வியாழக்கிழமை ஒரு இழுவைப் படகும் எரிபொருள் ஏற்றிச் செல்லும் எண்ணெய் கப்பல் இடையே ஏற்பட்ட வெடிப்பில், தீ விபத்து ஏற்பட்டது.

அச்சம்பவத்தில் இருவர் பலியானதோடு 15 பேர் காயமடைந்தனர்.

உள்ளூர் நேரப்படி காலை மணி 6 அளவில், எண்ணெய் கப்பலில் இருந்து, டீசலை இழுவைப் படகுக்கு மாற்றும் போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக தொடக்க கட்ட தகவல்கள் கூறுகின்றன.

கப்பலில் இருந்த அனைத்து நபர்களும் வெளியேற்றப்பட்டனர்

உயிரிழந்த இருவரும் அடையாளம் காணும் செயல்முறைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

-- பெர்னாமா-சின்ஹுவா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)