Ad Banner
Ad Banner
 விளையாட்டு

உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கு வரவேற்பு இல்லை

18/06/2025 07:59 PM

நியூ ஜெர்சி, 18 ஜூன் (பெர்னாமா) -- அமெரிக்காவில் நடைபெற்று வரும் கிளப் உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கு  அமோக வரவேற்பு கிடைக்காததால் அனைத்துலக காற்பந்து சம்மேளனமான பிஃபா மீண்டும் ஒரு பெரிய அடியைச் சந்தித்துள்ளது.

தென் கொரிய கிளப் - உல்சன் மற்றும் தென்னாப்பிரிக்க அணியான மாமெலோடி சன்டவுன்ஸ் இடையேயான ஆட்டங்கள் மந்தமான சூழ்நிலையில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

ஆர்லாண்டோவில் உள்ள இன்டர் & கோ அரங்கில் 25,500 பேர் அமரும்  நிலையில் போட்டிக் காண்பதற்கு 3,412 பார்வையாளர்கள் மட்டுமே வந்திருந்தனர். 

கிளப் உலக கிண்ண வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இது மிகவும் குறைவான வருகையாகும்.

கடந்த திங்கட்கிழமை அட்லாண்டாவின் மெர்சிடிஸ் பென்ஸ் அரங்கில்  லாஸ் ஏஞ்சலஸ் - செல்சிக்கான முதல் போட்டியும் மோசமான வரவேற்பைப் பெற்றது. 

75,000 பார்வையாளர்களைக் கொண்ட அரங்கில்  22,000 பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

டிக்கெட்டுகள் வரை குறைந்த விலையில் விற்கப்பட்டாலும், அவை இன்னும் கணிசமான எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கத் தவறிவிட்டதாக கூறப்படுகிறது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)