கோலாலம்பூர், 26 ஜூன் (பெர்னாமா) -- கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வில் 10A-க்கள் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்று, மெட்ரிகுலேஷனுக்கு விண்ணப்பித்த அனைத்து சிறந்த மாணவர்களுக்கும், இனம் அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல் வாய்ப்பு வழங்கப்படும்.
நேற்று நடைபெற்ற அமைச்சரைவில் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தது போலவே, இவ்வாண்டும் A- உட்பட 10A-க்கள் பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் பயில வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.
2024-ஆண்டு எஸ்.பி.எம் தேர்வில் 10A-க்கள் பெற்ற அனைத்து சிறந்த மாணவர்களும், தங்கள் படிப்பைத் தொடர வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்வதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
அதே வேளையில், மெட்ரிகுலேஷனில் பூமிபுத்ரா ஒதுக்கீடு முறை தொடர்ந்து நீடிக்கும் என்றும், அது பாதிக்கப்படாது என்றும் பிரதமர் முன்னதாக கூறியிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)