ஹைதராபாத், 30 ஜூன் (பெர்னாமா) -- இந்தியாவின் தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
13 பேர் இடிபாடுகளுக்கு இடையேயிருந்து மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இந்த விபத்து குறித்து போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்த அனைத்து தொழிலாளர்களும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் பலர் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தின்போது உருவான வெடிச்சத்தம் வெகுதூரம் வரை கேட்டது.
அச்சமயம் கட்டடங்கள் குலுங்கியதாக ஆலைக்கு அருகே குடியிருப்பவர்கள் தெரிவித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)